சிவமொக்கா மாவட்டத்தில் 86 பேர் வேட்பு மனு தாக்கல்
சிவமொக்கா மாவட்டத்தில் 86 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.;
சிவமொக்கா-
சிவமொக்கா மாவட்டத்தில் 86 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
வேட்புமனு தாக்கல்
கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் வருகிற 10-ந்தேதி நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்கல் கடந்த 13-ந் தேதி தொடங்கி நேற்றுமுன்தினம் நிறைவடைந்தது. இதனால் மாநிலம் முழுவதும் அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய படையெடுத்தனர். இதேபோல் சிவமொக்கா மாவட்டத்தில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளிலும் வேட்பு மனு தாக்கல் பரபரப்பாக காணப்பட்டது.
இதுவரை சிவமொக்கா மாவட்டத்தில் 86 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அதிகபட்சமாக பத்ராவதியில் 17 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். ஆனால், தீர்த்தஹள்ளி சட்டசபை தொகுதியில் 6 பேர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் 79 ஆண் வேட்பாளர்களும், 7 பெண் வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இறுதி வேட்பாளர் பட்டியல்
இதில் 86 பேர் 134 வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனுக்களை திரும்ப பெற நாளை மறுநாள்(திங்கட்கிழமை) கடைசி நாளாகும். இறுதி வேட்பாளர் பெயர் பட்டியல் வெளியிடப்படும்.
தொகுதி வாரியாக வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் விவரம்:-
சிவமொக்கா-15 பேர், சிவமொக்கா புறநகர்-14, பத்ராவதி- 17, தீர்த்தஹள்ளி- 6, சாகர்-12, சொரப்-10, சிகாரிப்புரா 12 என மொத்தம் 86 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அதிகபட்சமாக சொரப் தொகுதியில் 10 வேட்பாளர்கள் 18 வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருப்பதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.