கோலாரில் கோவில் உண்டியலை உடைத்து திருடிய 3 பேர் கைது

கோவில் உண்டியலை உடைத்து திருடி வந்த 3 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 175 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

Update: 2023-09-07 18:45 GMT

கோலார் தங்கவயல்

கோவில் உண்டியல் திருட்டு

கோலார் புறநகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் இரவு நேரங்களில் தனியாக செல்பவர்களிடம் மர்ம நபர்கள் கத்தி முனையில் மிரட்டி பணம், நகை பறித்து வந்தனர்.

இதுகுறித்து வந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வழிப்பறி கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கோலாரில் கோவில் உண்டியலை உடைத்து மர்மநபர்கள் திருடுவது அதிகரித்துவிட்டது.

இதுகுறித்து வந்த தகவலின் பேரில் கோலார் புறநகர் போலீசார் தேசிய நெடுஞ்சாலைப்பகுதியில் தீவிர ரோந்து பணிகள் மேற்கொண்டனர்.

அப்போது அந்த பகுதியில் சந்தேகம் ஏற்படும் வகையில் 5 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து ஓடினர்.

இதை பார்த்த போலீசார் 5 பேரையும் துரத்தி சென்றனர். அப்போது 3 பேர் பிடிபட்டனர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

3 பேர் கைது

விசாரணையில் அவர்கள் முல்பாகல் தாலுகா ஒசப்பாள்யா கிராமத்தை சேர்ந்த சங்கரா (வயது 30), பங்காருபேட்டை தாலுகா கேனிபெலா கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ் (35), முல்பாகல் தாலுகா மரகேடு கிராமத்தை சேர்ந்த காதர் பாஷா (50) என்பது தெரியவந்தது.

இவர்கள் இரவு நேரங்களில் கோவில் உண்டியல்களை உடைத்து, பணத்தை கொள்ளையடித்து வந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக கைதான 3 பேர் கொடுத்த தகவலின் பேரில் அவர்களிடம் இருந்து 175 கிராம் தங்கம் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவான சரண்ராஜ் உள்பட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்