3 புதிய குற்றவியல் சட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும்: பிரதமருக்கு மம்தா பானர்ஜி கடிதம்

குற்றவியல் சட்டங்களும் நிறைவேற்றப்பட்டது ஜனநாயகத்தின் இருட்டடிப்பான காலம் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-21 08:26 GMT

புதுடெல்லி,

ஜூலை 1-ஆம் தேதி அமல்படுத்தப்பட உள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவதை நிறுத்தி வைக்க வேண்டும் என பிரதமர் மோடியை மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதிய கடிதத்தில்,

"மூன்று புதிய குற்றவியல் சட்டங்களும் 146 எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்து நிறைவேற்றப்பட்டது. 3 புதிய குற்றவியல் சட்டங்களும் நிறைவேற்றப்பட்டது ஜனநாயகத்தின் இருட்டடிப்பான காலம். எனவே 3 புதிய குற்றவியல் சட்டங்களை நிறுத்தி வைக்கவேண்டும். நிறுத்தி வைப்பதால் குற்றவியல் சட்டங்களை மீண்டும் நாடாளுமன்றத்தில் மறுஆய்வு செய்ய உதவும்."என தெரிவித்துள்ளார்.

மூன்று புதிய குற்றவியல் சட்டங்களையும் நிறுத்தி வைக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியதை தொடர்ந்து மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜியும் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

 

 

Tags:    

மேலும் செய்திகள்