கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவ கொள்கை வகுக்க வேண்டும்: மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உத்தரவு

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவ கொள்கை வகுக்க வேண்டும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.;

Update:2021-05-30 04:33 IST
பெற்றோரை இழந்த குழந்தைகள்
பல உயிர்களை பலி வாங்கிய கொரோனா தொற்று பல குழந்தைகளின் பெற்றோரை காவு வாங்கி உள்ளது. மாநிலத்தில் இதுவரை 2 ஆயிரத்து 290 குழந்தைகள் தாய், தந்தை இருவரையுமோ அல்லது இருவரில் ஒருவரையோ இழந்துள்ளனர். இந்த நிலையில் இவர்களை பாதுகாக்க கொள்கை வகுக்க வேண்டும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டு உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நிவாரணம்
கொரோனா பெருந்தொற்று காரணமாக தங்கள் பெற்றோரை இழந்த குழந்தைகளின் நலன் கருதி அவர்களின் தேவைகளை கவனிக்க பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை கொள்கை வகுக்க வேண்டும். இத்தகைய குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து அரசு விவாதிக்கும். கொரோனா வைரசில் இருந்து மாநிலத்தில் உள்ள குழந்தைகளை பாதுகாப்பதற்கான அமைக்கப்பட்ட குழுவும், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகமும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்