ஐ.பி.எல் 2022: ஸ்டம்ப்பை தாக்கிய பந்து .. கீழே விழாத பெயில்கள்..! - வைரல் வீடியோ
நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் பந்து ஸ்டம்ப்பை தாக்கியும் பெயில்கள் கீழே விழாத வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது
மும்பை,
15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மும்பையில் நேற்று தொடங்கியது. 2022- ஐபிஎல் போட்டியின் முதல் ஆட்டத்தில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.
நேற்று நடந்த போட்டியில் சென்னை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சென்னை அணி வீரர் அம்பத்தி ராயுடு 15 ரன்களில் ரன்-அவுட் ஆனார். அதற்கு முன்பாக கொல்கத்தா பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தி வீசிய பந்தை எதிர்கொண்ட ராயுடு அதனை ஸ்வீப் அடிக்க முயன்றார்.
அப்போது பந்து அவரது மட்டையில் லேசாக உரசி லெக் ஸ்டம்பின் மீது பட்டது . ஆனால் ஸ்டம்பின் மீது இருந்த பெயில்கள் கீழே விழவில்லை. இந்த பந்தை கொல்கத்தா அணியின் விக்கெட் கீப்பர் ஜாக்சன் பிடிக்க தவறினார். இதனால் பந்து பவுண்டரிக்கு சென்றது. தற்போது இந்த காட்சி சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
Watch Ambati Rayudu Survive even ball hits the stumps #ambatirayudu#TATAIPL#CSKvKKRpic.twitter.com/ggY8byKLlK
— Trending Cric Zone (@rishabhgautam81) March 26, 2022