பெண்கள் உலகக் கோப்பை: ஆஸ்திரேலியாவுக்கு 278 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா..!
இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்தது.;
ஆக்லாந்து,
பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆக்லாந்தில் நடைபெறும் 18-வது லீக் ஆட்டத்தில் 6 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணியுடன் இந்திய அணி மோதி வருகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா மற்றும் ஸஃபாலி வெர்மா தலா 10 மற்றும் 12 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களமிறங்கிய யாஷிகா பாட்டியா மற்றும் கேப்டன் மிதாலி ராஜ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தனர். யாஷிகா பாட்டியா 59 ரன்கள் (83 பந்துகள், 6 பவுண்டரி), மிதாலி ராஜ் 68 ரன்கள் (96 பந்துகள், 4 பவுண்டரி, 1 சிக்ஸர்) எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தனர்.
இந்த நிலையில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய உள்ளது.