ஆந்திரா: நவராத்திரியையொட்டி 6 கிலோ தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட பரமேஸ்வரி அம்மன்

நவராத்திரியையொட்டி 6 கிலோ தங்கத்தால் பரமேஸ்வரி அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.;

Update: 2024-10-12 00:39 GMT

அமராவதி,

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் அம்மன் கோவில்களில் சிறப்பு அலங்காரங்களும், அபிஷேகங்களும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கல்யாண பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நவராத்தியையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

இதன்படி 6 கிலோ தங்க ஆபரணங்களால் அம்மன் சிலை அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும் 4 கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் மற்றும் 10 கிலோ வெள்ளிப் பொருட்களாலும் பரமேஸ்வரி அம்மனுக்கு செய்யப்பட்டிருந்த சிறப்பான அலங்காரத்தைக் காண திரளான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். 

Full View


Tags:    

மேலும் செய்திகள்