இந்த வார விசேஷங்கள்: 8-10-2024 முதல் 14-10-2024 வரை
நாளை மறுதினம் மதுரை மீனாட்சி அம்மன், கொலு மண்டபத்தில் மகிசாசூரமர்த்தினி அலங்காரம்.;
8-ந்தேதி (செவ்வாய்)
* சஷ்டி விரதம்.
* திருப்பதி ஏழுமலையான் மோகினி அலங்காரம்.
* கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசப் பெருமாள் வெள்ளி சேஷ வாகனத்தில் பவனி.
* குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் பவனி.
* சமநோக்கு நாள்.
9-ந்தேதி (புதன்)
* திருப்பதி ஏழுமலையான் அனுமன் வாகனத்தில் பவனி.
* திருவில்லிபுத்தூர் பெரிய பெருமாள், உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் யானை வாகனத்தில் திருவீதி உலா.
* சிருங்கேரி சாரதாம்பாள் ராஜராஜேஸ்வரி அலங்காரம்.
* கீழ்நோக்கு நாள்.
10-ந்தேதி (வியாழன்)
* துர்காஷ்டமி.
* மதுரை பிரசன்ள வேங்கடேசப் பெருமாள் சேஷ வாகனத்தில் பவனி.
* திருவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் கண்ணாடி சப்பரத்தில் உலா.
* மதுரை மீனாட்சி அம்மன், கொலு மண்டபத்தில் மகிசாசூரமர்த்தினி அலங்காரம்.
* கீழ்நோக்கு நாள்.
11-ந்தேதி (வெள்ளி)
* சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, மகாநவமி.
* மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் வெண்ணெய் தாழி சேவை.
* குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் அன்ன வாகனத்தில் கலைமகள் கோலத்துடன் காட்சி.
* மதுரை மீனாட்சி அம்மன் கொலுமண்டபத்தில் சிவபூஜை.
* மேல்நோக்கு நாள்.
12-ந்தேதி (சனி)
* விஜயதசமி.
* திருப்பதி ஏழுமலையான் பல்லக்கில் உற்சவம்.
* குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் சூரசம்கார பெருவிழா.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் மாடவீதி உலா.
* மேல்நோக்கு நாள்
13-ந்தேதி (ஞாயிறு)
* சர்வ ஏகாதசி.
* கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசப் பெருமாள் கஜலட்சுமி வாகனத்தில் பவனி.
* திருவரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சனம்.
* திருவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
* மேல்நோக்கு நாள்.
14-ந்தேதி (திங்கள்)
* வைஷ்ணவ ஏகாதசி.
* திருவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் தீர்த்தவாரி.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
* திருத்தணி முருகப்பெருமான் பால் அபிஷேகம்.
* மேல்நோக்கு நாள்.