பொதுப்பணித்துறை அதிகாரிகள் முற்றுகை; கிராம மக்கள் போராட்டம்

கலசா டவுனில், சாலைகளை பார்வையிட வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.;

Update:2022-06-25 20:48 IST

சிக்கமகளூரு;

சிக்கமகளூரு மாவட்டம் கலசா டவுன் பகுதிக்கு நேற்று பொதுப்பணித்துறை என்ஜினீயர்கள் மஞ்சுநாத், சதீஷ் ஆகியோர் வந்தனர். அவர்கள் ஒரநாடு சாலை, குதிரேமுகா சாலை ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த சந்தர்ப்பத்தில் அப்பகுதி கிராம மக்கள் அதிகாரிகள் மஞ்சுநாத், சதீஷ் ஆகியோரை சூழ்ந்து கொண்டனர்.

மேலும் அதிகாரிகளை முற்றுகையிட்டு, கடந்த 5 ஆண்டுகளாக இந்த சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன. இதுவரையில் அவற்றை யாரும் கண்டுகொள்ளவில்லை. அதனால் விரைவில் அந்த சாலைகளை சீரமைத்து தர வேண்டும் என்று கோரி கோஷமிட்டனர்.

மேலும் அதிகாரிகளுடன் அவர்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து பேசிய அதிகாரிகள், 'விரைவில் இதுபற்றி கலசா தாலுகா பஞ்சாயத்து அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தி, அரசிடம் முறையான அனுமதி பெற்று சாலைகள் சீரமைக்கப்படும்' என்றனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்