வயநாடு நிலச்சரிவு; விக்னேஷ் சிவன்-நயன்தாரா தம்பதி ரூ.20 லட்சம் நிதியுதவி

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக விக்னேஷ் சிவன்-நயன்தாரா தம்பதி ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளனர்.

Update: 2024-08-02 12:24 GMT

சென்னை,

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 300-க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கேரள முதல்-மந்திரியின் பேரிடர் நிவாரண நிதிக்கு விக்னேஷ் சிவன்-நயன்தாரா தம்பதி ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளனர்.

இது தொடர்பாக விக்னேஷ் சிவன்-நயன்தாரா வெளியிட்டுள்ள அறிக்கையில், "வயநாடு நிலச்சரிவால் பல குடும்பங்களுக்கும், சமூகங்களுக்கும் ஏற்பட்ட இழப்புகள் மிகுந்த வேதனையளிக்கின்றன. இந்த நேரத்தில், ஒருவருக்கொருவர் ஆதரவாக ஒன்றிணைய வேண்டியது அவசியமாகும்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான உடனடி உதவிகளை வழங்கவும், மறுசீரமைப்பு பணிகளில் உதவி செய்யவும் முதல்-மந்திரியின் நிவாரண நிதிக்கு ரூ.20,00,000 வழங்குகிறோம்.

நமது அரசாங்கம், தன்னார்வலர்கள், மீட்புக் குழுக்கள் மற்றும் பல அமைப்புகளின் ஒருங்கிணைந்த முயற்சிகளை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த பேரிடரில் இருந்து மீண்டெழுவதற்கு, வலிமை மற்றும் அன்புடன் நாம் ஒன்றிணைவோம்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Tags:    

மேலும் செய்திகள்