வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன்

அடுத்து தான் இயக்க இருக்கும் படம் சிவகார்த்திகேயனுடன்தான் என்று இயக்குநர் வெங்கட் பிரபு கூறியுள்ளார்.

Update: 2024-08-26 10:49 GMT

நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி இருக்கும் 'கோட்' திரைப்படம் வரும் செப் 5ம் தேதி வெளியாகவுள்ளது. இதனால் திரைப்படத்தின் புரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. படக்குழு முடிந்த அளவுக்கு தொடர்ந்து அப்டேட்டுகளை வெளியிட்டு வருகின்றனர்.

படத்தின் ஸ்பெஷல் பாடல் இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ளதாக வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். படக்குழு மலேசியாவில் இன்று ஒரு நேர்காணலில் கலந்து கொண்டனர். அதில் வெங்கட் பிரபு அடுத்து தான் இயக்க இருக்கும் படத்தை பற்றிய தகவலை கூறினார்.

மலேசியா நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, "கோட் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மேல் இருக்கும். என் திரைவாழ்வில் என்னுடைய பெரிய படமும் இதுதான். நிச்சயம் ரசிகர்களைக் கவரும்." என்றார்.

வெங்கட் பிரபு அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயன் வைத்து படத்தை இயக்கவுள்ளதாக கூறியுள்ளார். சிவகார்த்திகேயன் அவர் ஏற்கனவே கமிட்டான படங்களில் நடித்து முடித்தப்பின் இத்திரைப்படத்திற்கான பணிகள் தொடரும் என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்