புஷ்பா 2-ல் ஒரு பாடலுக்கு நடனமாடும் திரிப்தி டிம்ரி ?

புஷ்பா 2 படத்தில் திரிப்தி டிம்ரி சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Update: 2024-09-09 10:00 GMT

சென்னை,

அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'புஷ்பா தி ரைஸ்'. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சுனில், பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இந்த படம் அனைத்து மொழி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. அதேசமயம், இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களும் ரசிகர்களிடம் பெரிதும் கவனம் பெற்றன.

இந்த படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து, புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. 'புஷ்பா 2 தி ரூல்' என்ற தலைப்பில் உருவாகி வருகிறது. சமீபத்தில் 'புஷ்பா 2 தி ரூல்' படத்தின் டீசரும் அதனைத் தொடர்ந்து படத்தின் 'புஷ்பா புஷ்பா' என்ற முதல் பாடலின் லிரிக் வீடியோவும் வெளியாகி வைரலானது.

அதனை தொடர்ந்து இரண்டாவது பாடலான 'சூசெகி (The Couple Song)' என்ற பாடல் வெளியாக உள்ளது. இந்தநிலையில் படக்குழுவினர், புஷ்பா 2 படத்தில் வரும் ஒரு சிறப்பான பாடலுக்காக கேமியோ ரோலில் நடிக்க நடிகைகளை தேர்வு செய்து வந்தனர். அதற்காக நடிகை ஜான்வி கபூர் மற்றும் திரிப்தி டிம்ரி ஆகியோர் பரிசீலனை செய்யப்பட்டனர்.

தற்போது, நடிகை திரிப்தி டிம்ரியை கேமியோ ரோலில் நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. 'புஷ்பா' படத்தின் முதல் பாகத்தில் 'ஊ சொல்றியா' பாடலுக்காக சமந்தா சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.  

Tags:    

மேலும் செய்திகள்