நாளை வெளியாகிறது 'வாழை' பட டிரெய்லர்

'வாழை' படத்தின் பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி கவனம் பெற்றன.

Update: 2024-08-18 08:06 GMT

சென்னை,

'பரியேறும் பெருமாள்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான மாரி செல்வராஜ், தனுஷ் நடித்த 'கர்ணன்', உதயநிதி ஸ்டாலின் நடித்த 'மாமன்னன்' உள்ளிட்ட படங்களை இயக்கி பாராட்டை பெற்றார். அதனைத்தொடர்ந்து, மாரி செல்வராஜ் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் 'வாழை'.

இந்த படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தில் நடிகர் கலையரசன் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் நிகிலா விமல், திவ்யா துரைசாமி, 'வெயில்' படம் மூலம் பிரபலமான பிரியங்கா மற்றும் சில சிறுவர்கள் நடித்துள்ளனர்.

சமீபத்தில், 'வாழை' படத்தின் பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி கவனம் பெற்றன. வரும் 23-ம் தேதி படம் வெளியாக உள்ளநிலையில், படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, நாளை 'வாழை' பட டிரெய்லர் வெளியாகும் என்று மாரி செல்வராஜ் போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்