5 மில்லியன் பார்வையாளர்களை கடந்த 'லியோ' படத்தின் டைட்டில் புரோமோ

லியோ படத்தின் டைட்டில் புரோமோ சில மணி நேரங்களில் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது .;

Update:2023-02-03 22:54 IST
5 மில்லியன் பார்வையாளர்களை கடந்த லியோ  படத்தின் டைட்டில் புரோமோ

சென்னை,

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு 'தளபதி 67' என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்கிறார். இந்த படத்தில் நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை திரிஷா, நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர் மிஸ்கின், இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி (நடிகராக அறிமுகமாகிறார்), மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு காஷ்மீர் சென்றுள்ளது. இந்த நிலையில் 'தளபதி 67' படத்தின் டைட்டில் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது. அதன்படி 'தளபதி 67' படத்தின் டைட்டில் வீடியோ சோனி மியூசிக் இந்தியா யூ-டியூப் சேனலில் வெளியாகி உள்ளது.

இந்த படத்திற்கு 'லியோ' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. மேலும் 'லியோ' திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19-ந்தேதி வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது.

இந்த'நிலையில் 'லியோ' படத்தின் டைட்டில் புரோமோ சில மணி நேரங்களில் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது . தற்போது வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்