ரஜினியின் ஜெயிலர் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர் சுனில்..!

படக்குழு புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்துள்ளது.

Update: 2023-01-17 14:10 GMT

சென்னை,

ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர்' படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி வருகிறார். நெல்சன் திலீப் குமார் டைரக்டு செய்கிறார். 65 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஜெயிலர் படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமாரும் நடிக்கிறார். அவரது கதாபாத்திரம் வில்லனாக சித்தரிக்கப்பட்டு உள்ளது என்கின்றனர். ரஜினியின் 'படையப்பா' படத்தில் நீலாம்பரியாக நடித்து ரசிகர்களை கவர்ந்த ரம்யா கிருஷ்ணனும் 'ஜெயிலர்' படத்தில் இணைந்துள்ளார். மேலும், ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் மலையாள நடிகர் மோகன்லாலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக மலையாள இணையதளங்களில் தகவல் வெளியானது.

இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படத்தில் தெலுங்கு நடிகர் சுனில் இணைந்துள்ளார் . படக்குழு புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்