சூர்யா நடித்துள்ள 'கங்குவா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
'கங்குவா' படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
சென்னை,
இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். 3டி முறையில் சரித்திர படமாக உருவாகும் 'கங்குவா' திரைப்படம் 10 மொழிகளில் வெளியாக உள்ளது. 'கங்குவா' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, 'கங்குவா' திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 10-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. மனித பிணங்கள் மலைப் போல குவிக்கப்பட்டு அதன் மேல் சூர்யா வாள் ஏந்தியபடி நிற்கும் இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.