திருட்டுத்தனமாக அஜித் படத்தின் பாடல் இணையத்தில் கசிந்தது
அஜித்தின் துணிவு படத்தின் ‘சில்லா சில்லா’ பாடல் இணையதளத்தில் திருட்டுத்தனமாக கசிந்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அஜித்குமார் நடித்துள்ள 'துணிவு' படம் பொங்கல் பண்டிகையில் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தை வினோத் டைரக்டு செய்துள்ளார். மஞ்சுவாரியர் நாயகியாக நடித்துள்ளார். சமுத்திரக்கனி போலீஸ் அதிகாரியாக வருகிறார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். துணிவு படத்தில் மூன்று பாடல்கள் இடம்பெற்று உள்ளன. இந்த நிலையில் துணிவு படத்தில் இடம்பெற்றுள்ள 'சில்லா சில்லா' என்று தொடங்கும் பாடல் நாளை (9-ந் தேதி) வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்து இருந்தனர். இந்த பாடலை அனிருத் பாடி இருந்தார். ரசிகர்களும் பாடலை கேட்க ஆர்வமாக இருந்தார்கள். இந்த நிலையில் 'சில்லா சில்லா' பாடல் இணையதளத்தில் திருட்டுத்தனமாக கசிந்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாடலை வெளியிட்டவரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க விசாரணை நடந்து வருகிறது. சில்லா சில்லா பாடலை பகிரவேண்டாம் என்று படக்குழுவினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.