கர்ப்ப கால சிறப்பு கவனிப்பு... புகைப்படங்களை பகிர்ந்த நடிகை இலியானா

நடிகை இலியானா டிகுரூஸ் தனது கர்ப்ப கால சிறப்பு கவனிப்பு பற்றிய புகைப்படங்களை தொடர்ச்சியாக பகிர்ந்து வருகிறார்.

Update: 2023-05-04 07:52 GMT

புனே,

தமிழ், தெலுங்கில் பிரபல நடிகையாக இருப்பவர் இலியானா டிகுரூஸ். பின்னர் இந்தி திரைப்படங்களிலும் நடிக்க போனார். தமிழில் கேடி, நண்பன் படங்களில் அவர் நடித்துள்ளார். குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாக ஆன அவர், நண்பன் படத்தில் நடிகர் விஜய்யுடன் ஜோடியாக நடித்து அசத்தினார்.

அந்த படத்தில் இடம் பெற்ற இருக்கானா இடுப்பிருக்கானா என்ற பாட்டுக்கு இடுப்பை ஆட்டி ரசிகர்களை கவர்ந்த அவர், அதன்பின்பு உடல் பெருத்து இருந்த புகைப்படங்களை வெளியிட்டு அதிர்ச்சி ஏற்படுத்தினார்.

அவரா இது? என அடையாளம் காண முடியாத அளவுக்கு குண்டாக காணப்பட்டார். எனினும், அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராமில் பல புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவருக்கு லட்சக்கணக்கில் பாலோயர்கள் உள்ளனர்.

 

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒரு நாள் காலை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவில், நல்ல செய்தி!! என தெரிவித்து தொடர்ந்து, விரைவில் வரவுள்ளது. என்னுடைய குட்டி டார்லிங்கை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என பதிவிட்டார்.

இதற்கு சான்றாக சில புகைப்படங்களை அவர் வெளியிட்டார். அதில், குழந்தையின் உடையில், சாகச பயணம் தொடங்கி விட்டது என்ற பொருள் படும்படியான எழுதப்பட்ட வாசகம் அடங்கியிருந்தது.

எனினும், தனது காதலர் யாரென்ற விவரங்கள் எதனையும் அவர் வெளியிடவில்லை. அவரது இந்த பதிவை பார்த்ததும், வாழ்த்துகள் டார்லிங் என்றும், ஓ மை காட்! வாழ்த்துகள் என்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை கூற தொடங்கி விட்டனர்.

 

எனினும் வேறு சிலர், இதனை நம்ப முடியாமல் உங்களுக்கு திருமணம் ஆகியுள்ளதா? என்றும் குழந்தைக்கு தந்தை யாரென்றும் கேட்டு உள்ளனர். மற்றொருவர், தயவு செய்து பிற விவரங்களையும் வெளியிட முடியுமா? என்று கெஞ்சி கேட்டுள்ளார்.

ஆரம்பத்தில் இருந்தே தனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி இலியானா எந்த விவரங்களையும் வெளியிடாமல் இருந்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, புகைப்பட கலைஞரான ஆண்ட்ரூ நீபோன் என்பவருடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.

அப்போது, 'எப்போதும் சிறந்த கணவராக இருப்பவர்' என அவரை பற்றி பெருமையாக தனது இன்ஸ்டாகிராமில் இலியானா குறிப்பிட்டார். ஆனால், அவர்களுக்கு இடையே திருமணம் நடந்து விட்டதா? என்ற விவரம் தெரியவில்லை.

2019-ம் ஆண்டில் இந்த நட்பு முடிவுக்கு வந்தது. அதனையும் சமூக ஊடகத்தில் அவர் பகிர்ந்து கொண்டார். இதன்பின் அவர் தற்கொலைக்கு முயன்றார் என்றும், கர்ப்பமடைந்து உள்ளார் என்றும் கருக்கலைப்பு செய்து விட்டார் என்றும் தகவல்கள் பரவின.

இதனையெல்லாம் அவர் முற்றிலும் மறுத்து விட்டார். இதன்பின் சமீபத்தில் நடிகை கத்ரீனா கைப்பின் சகோதரரான செபாஸ்டியன் லாரன்ட் மிச்செல் என்பவருடன் டேட்டிங்கில் ஈடுபட்டு வருகிறார் என தகவல்கள் வெளிவந்தன.

 

கத்ரீனா கைப் மற்றும் விக்கி கவுசல் ஜோடியாக மாலத்தீவில் இருந்தபோது, அவர்களுடன் இலியானாவும் ஒன்றாக காணப்பட்டார். அந்த புகைப்படங்களையும் பகிர்ந்து கொண்டார். அதில் கைப்பின் சகோதரர் செபாஸ்டியனும் ஒன்றாக காணப்பட்டார்.

இந்த நிலையில், கர்ப்பமடைந்து இருக்கும் செய்தியை தனது ரசிகர்களிடம் அவர் பகிர்ந்து உள்ளார். தொடர்ந்து, பல புகைப்படங்களையும், வீடியோக்களையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.

இதில் சமீபத்தில், இலியானாவின் கர்ப்பகால கவனிப்புக்காக அவரது சகோதரி தயாரித்து இருந்த பிளாக் பாரெஸ்ட் கேக் புகைப்படங்களையும் அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார். அதில், கர்ப்பிணிகளுக்கான கூடுதல் கவனிப்புகள். குறிப்பிடும்படியாக, உங்களது சகோதரி எப்போதும் இல்லாத வகையில் சிறந்த பிளாக் பாரெஸ்ட் கேக்கை தயாரிக்கும்போது என பதிவிட்டு உள்ளார்.

அடுத்த புகைப்படத்தில், அந்த கேக் துண்டு ஒன்றை தட்டில் வைத்து கொண்டு, அம்மா ஆக போகிறேன் என அதற்கு தலைப்பிட்டு உள்ளார். இதனை தொடர்ந்து, அம்மாவாக போகிற இலியானா அவரது இன்ஸ்டாகிராமில் இன்று ஓய்வாக இருக்கும் காட்சிகள் கொண்ட வீடியோ ஒன்றை பகிர்ந்து உள்ளார்.

அதில், அவரது செல்ல பிராணியான நாயும் அசதியில் தூங்கி கொண்டிருக்கிறது. அவர் கர்ப்ப காலகட்டத்தில் ஓய்வெடுக்கும் காட்சிகளை பகிர்ந்து உள்ளார். கையில் கோப்பை ஒன்றுடன் படுக்கையில் தளர்வாக காணப்படுகிறார். அதன் இறுதியில், பெரிய வயிறுடன், கர்ப்பிணியாக இருப்பது போன்ற காட்சியும் இடம் பெற்று உள்ளது.

அவரது செல்ல நாய் தூங்கும் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்து, அது சவுகரியமுடன் இருக்கிறது. இல்லையா? என்றும் அவர் ரசிகர்களிடம் கேட்டு உள்ளார். கடைசியாக, நடிகர் அபிஷேக் பச்சனுடன் பிக் புல் என்ற படத்தில் இலியானா நடித்து உள்ளார். அடுத்து அன்பேர் அண்ட் லவ்லி என்ற படத்தில் ரன்தீப் ஹூடா ஜோடியாக நடித்து வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்