ஹீரோவிடம் ரூ.25 கோடி கடன் வாங்கிய நடிகை சமந்தா...! எதற்காக தெரியுமா?

ஒரு வருடம் படங்களில் இருந்து ஒதுங்கி இருப்பதன் மூலம் ஓய்வு எடுக்கலாம் என நம்புகிறார் சமந்தா. சமூக வலைதளங்களில் மட்டுமே ஆக்டிவாக இருப்பார்.

Update: 2023-08-04 11:09 GMT

ஐதராபாத்,

சமந்தா நடிப்பில் சமீபத்தில் வந்த படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. சாகுந்தலம் படம் படுதோல்வி அடைந்தது. தற்போது விஜய்தேவரகொண்டா ஜோடியாக 'குஷி' என்ற தெலுங்கு படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் தமிழிலும் வெளியாக இருக்கிறது. குஷி வரும் செப்டம்பர் 1 ம் தேதி வெளியாகவுள்ளது. சமந்தா இந்தி வெப் தொடரான சிட்டாடலிலும் நடித்து முடித்து உள்ளார்.

ஏற்கனவே சமந்தாவுக்கு மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக அவர் சிகிச்சை எடுத்தும் குணமாகவில்லை. சமந்தா நடிப்பில் வருடத்திற்கு மூன்று படங்கள் வெளியாகி கொண்டு இருந்தன. கொரோனா தொற்று கால பாதிப்புக்கு பிறகு சமந்தாவின் சினிமா வாழ்க்கையின் வேகம் குறைந்துவிட்டது. எல்லாம் சரியாகிவிட்டது என்று நினைக்கும் போது அவருக்கு மயோசிடிஸ் பாதிப்பு ஏற்பட்டது. இப்போது சமந்தா ஒரு வருடம் ஓய்வு எடுக்க வேண்டும்.

ஒரு வருடம் படங்களில் இருந்து ஒதுங்கி இருப்பதன் மூலம் ஓய்வு எடுக்கலாம் என நம்புகிறார் சமந்தா. சமூக வலைதளங்களில் மட்டுமே ஆக்டிவாக இருப்பார்.

இந்த நிலையில் சிகிச்சைக்காக ஒரு நடிகரிடம் ரூ.25 கோடி வரை கடன் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.  ஆனால் அந்த ஹீரோ யார் என்று தெரியவில்லை.

தற்போது பாலியில் விடுமுறையை அனுபவித்து வரும் சமந்தா, விரைவில் அமெரிக்கா செல்லவுள்ளார்.

அங்கே ஒரு வருடம் தங்கி பூரண குணமடைந்த பிறகு இந்தியா திரும்புவார். இதற்காக, அந்த நடிகரிடம் கடன் வாங்கி உள்ளார். ஆனால் இது குறித்து சமந்தா தரப்பிலிருந்தோ அல்லது அவரது குழுவினரிடமிருந்தோ எந்த தகவலும் இல்லை.

சமந்தா ஒரு பக்கம் சினிமாவில் நடித்தும், மறுபக்கம் வியாபாரம் செய்தும் பொருளாதார ரீதியாக செட்டில் ஆகிவிட்டார். இவரது சொத்து மதிப்பு ரூ.101 கோடி இருக்கும்.

சமந்தா ஒவ்வொரு படத்திற்கும் ரூ.3.5 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. இதுதவிர பல விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.  மேலும் ஒப்பந்தங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் சம்பாதித்து வருகிறார்.  இதை வைத்து பார்த்தால் ஆண்டுக்கு 12 கோடி ரூபாய் சம்பாதித்து வருகிறார். இதனால் அவர் கடன் வாங்க வேண்டிய அவசியம் என்ன? என்பது அனைவரின் சந்தேகம். எனவே இதில் உண்மை இல்லை என்றே தெரிகிறது.

Tags:    

மேலும் செய்திகள்