சமந்தா படத்தின் 'மகிமை ஆலயம்' வீடியோ பாடல் வெளியீடு..!

மகிமை ஆலயம்' பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது

Update: 2023-04-18 17:18 GMT

இயக்குனர் குணசேகர் இயக்கத்தில் சமந்தா நடித்துள்ள திரைப்படம் 'சாகுந்தலம்'. இப்படத்தில் மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.

இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 5 மொழிகளில் ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் 'மகிமை ஆலயம்' பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. கபிலன் வரிகளில் அனுராக் குல்கர்னி பாடியுள்ள இந்த பாடலின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


Tags:    

மேலும் செய்திகள்