'பீட்சா 3' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

'பீட்சா 3' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-07-23 20:02 GMT

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி, ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான 'பீட்சா' படம் வெற்றி பெற்றதால் அதன் இரண்டாம் பாகமும் வெளியானது. தற்போது பீட்சா 3-ம் பாகம் 'பீட்சா 3 மம்மி' என்ற பெயரில் தயாராகி உள்ளது. இதில் அஸ்வின் காக்குமனு, பவித்ரா மாரிமுத்து, கவுரவ் நாராயணன், காளி வெங்கட், குரேஷி, அனுபமா, அபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சி.வி.குமார் தயாரித்துள்ள இந்த படத்தை மோகன் கோவிந்த் இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். அருண் ராஜ் இசையமைத்துள்ளார். இந்த படம் மே 12-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் சில காரணங்களால் தள்ளிப்போனது.

இந்த நிலையில் இந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 'பீட்சா 3 மம்மி' திரைப்படம் வருகிற ஜூலை 28-ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Tags:    

மேலும் செய்திகள்