'லவ் டுடே' இயக்குநருடன் இணையும் மைத்திரி மூவி மேக்கர்ஸ்?

‘லவ் டுடே’ இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து படம் இயக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2024-04-07 12:24 GMT

சென்னை,

டெல்லி கணேஷ் நடிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் 2020-ம் ஆண்டு வெளிவந்த அப்பா லாக் என்ற குறும்படம் யூ டியூபில் வைரலானது . பின் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த கோமாளி படத்தில் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

கோமாளி படம் ஜெயம் ரவிக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது. கோமாளி படத்தின் மூலம் பிரதீப் ரங்கநாதனுக்கு ஒரு மிகப் பெரிய வரவேற்பும், ரசிகர் பட்டாளமும் உருவாகியது.

பிரதீப் ரங்கநாதன் அவரே இயக்கி மற்றும் நடித்து 2022-ம் ஆண்டு வெளியான லவ் டுடே படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது, மக்களிடம் இந்த திரைப்படம் மிகவும் ரசிக்கப்பட்டது. வசூல் ரீதியாகவும் மிக பெரிய அளவில் குவித்தது.

தற்பொழுது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிக் கொண்டு இருக்கும் எல்.ஐ.சி படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். கிருதி ஷெட்டி இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். எஸ்.ஜே சூர்யா, யோகி பாபு, கவுரி ஜி கிஷன் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்நிலையில் அடுத்ததாக பிரதீப் ரங்கநாதன் மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து படம் இயக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்திற்காக பிரதீப் ரங்கநாதன் மைத்திரி மூவி மேக்கர்ஸிடம் சம்பளம் 10 கோடி ரூபாய் கேட்டிருப்பதாக தகவல் பரவி வருகிறது.

இப்படத்தில் இந்த சம்பளத்தில் கமிட் ஆவதற்கு முன் அவர் ரூ.15 கோடி வரை சம்பளம் பேசி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்