'லியோ' படத்தின் பாடல் 20 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை

வெளியாகி 24 மணி நேரத்தில் ‘நா ரெடி’ பாடல் 20 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

Update: 2023-06-23 13:26 GMT

சென்னை,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு 'லியோ' படத்தில் இருந்து "அல்டர் ஈகோ நா ரெடி" பாடலை 'லியோ' படக்குழு நேற்று வெளியிட்டது. இந்த பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளார். மேலும் சில நடன காட்சிகளும் இந்த பாடல் வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

இந்த பாடல் ரசிகர்களிடையே வைரலாக பரவிய நிலையில், வெளியான சில நிமிடங்களில் 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனையை படைத்தது. விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தின் 'வாத்தி கம்மிங்' பாடல் ரிலீசான சில நிமிடங்களில் இருந்த பார்வையாளர்களைவிட, 'நா ரெடி' பாடலின் பார்வையாளர்கள் அதிகம் ஆகும்.

இதைத் தொடர்ந்து 'நா ரெடி' பாடல் 10 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. இந்த நிலையில், வெளியாகி 24 மணி நேரத்தில் 'நா ரெடி' பாடல் 20 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதை சோனி மியூசிக் சவுத் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.   



Tags:    

மேலும் செய்திகள்