இசைஞானி என்ற பெயரை சூட்டிய தலைவர்...கருணாநிதியின் நினைவலைகளை பகிர்ந்த இளையராஜா...!

என் தந்தை வைத்த பெயர் அவருக்கு எப்படி தெரிந்தது என்று நான் வியந்தேன்.

Update: 2022-06-03 13:35 GMT

கோவை,

கோவை கொடிசியா மைதானத்தில் இளையராஜாவின் இசை கச்சேரி நடந்தது.

இதில் கலைஞர் வழியில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சியை வழிநடத்திச் செல்வது மகிழ்ச்சி அளிக்கிறது என இளையராஜா பாராட்டி பேசினார்.

இந்நிகழ்வில் பேசிய இளையராஜா,

"எனது அப்பா எனக்கு வைத்த பெயர் ஞானதேசிகன். பின்னர் பள்ளியில் எனது பெயரை ராஜய்யானு மாத்திட்டாங்க. பிறகு மியூசிக் மாஸ்டர் ராஜய்யா என்ற பெயர் நல்லா இல்லை ராஜானு வச்சிக்க சொல்லி மாத்திட்டாரு. பிறகு ராஜா என்ற பெயர் தான் நீண்ட நாள் இருந்தது.

அதன் பிறகு பட வாய்ப்பு வந்தபோது பஞ்சு அருணாசலம் இளையராஜானு என் பெயரை மாத்திட்டாரு. அதிலிருந்து நான் இப்போது வரை இளையராஜா தான். ஆனா கலைஞர் ஐயா தான் அப்பா வெச்ச ஞானதேசிகன்னு பேர்ல இருந்து ஞானத்தை எடுத்து 'இசைஞானி' என்ற பட்டத்தை அறிவித்தார்.

என் தந்தை வைத்த பெயர் அவருக்கு எப்படி தெரிந்தது என்று நான் வியந்தேன்.அதுதான் தலைவருடைய சிறப்பு. என் தந்தைக்குச் சமமானவர் கலைஞர். கலைஞர் வழியில் தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்