பிரபல நடிகர் மரணம்

Update: 2023-06-28 05:01 GMT

மலையாள திரையுலகின் மூத்த நடிகரான சி.வி.தேவ் உடல்நலக்குறைவால் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி சி.வி.தேவ் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 83.

சி.வி. தேவ் நூற்றுக்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்து இருக்கிறார். இவர் 19 வயதிலேயே 'விளக்கிண்டே வெளிச்சத்தில்' என்ற படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்த படம் 1959-ல் வெளியானது. 1982-ல் சாகித்ய அகாடமி விருது பெற்ற எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதிய 'கோபுர நடையில்' படத்தில் நடித்து இருந்தார்.

யாரோ ஓரல் என்ற மலையாள படத்தை டைரக்டும் செய்து இருந்தார். பொந்தன் மட என்ற படத்தில் மம்முட்டி மற்றும் நசுருதின் ஷாவுடன் இணைந்து நடித்து இருந்தார். சத்யம், ஈ புழையும் கடன்னு, மிழி இரண்டிலும், சந்திரோல்சவம், சந்தோஷ்ம் உள்ளிட்ட பல முக்கிய படங்களிலும் நடித்து இருக்கிறார்.

சி.வி. தேவ் மறைவுக்கு கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் மற்றும் மலையாள நடிகர் நடிகைகள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்