சினிமாவில் தடைகளை எதிர்கொண்டேன் - நடிகை சோபிதா துலிபாலா

Update:2023-06-25 11:57 IST

தமிழில் 'பொன்னியின் செல்வன்' படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் சோபிதா துலிபாலா. மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தற்போது மங்கி மேன் என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். சினிமாவில் எதிர்கொண்ட தடைகள் குறித்து சோபிதா துலிபாலா பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து சோபிதா துலிபாலா அளித்துள்ள பேட்டியில், "ஒருமுறை படி தாண்டி வெளியே வந்தால் யுத்தம் செய்ய தயாராக இருப்பது அவசியம். எனக்கு எந்தவித சினிமா பின்னணியும் இல்லை. வர்த்தக விளம்பரங்களின் ஆடிஷனுக்கு சென்றபோது நிறைய முறை நீ அழகாக இல்லை என்று முகத்துக்கு நேராகவே சொல்லி நிராகரித்தார்கள்.

நான் கூட கண்ணாடியில் என்னை பார்த்துக்கொண்டு கொஞ்சம் கூட அழகாக இல்லையே என வருத்தப்பட்டேன். நிறைய தடைகள் வந்தன. ஏதோ ஒரு கமர்சியல் டைரக்டர் நம்மை தேடி வருவார் என்று ஒருபோதும் கனவு காணவில்லை. எனக்கு தெரிந்ததெல்லாம் ஆடிசனுக்கு செல்வது. 100 சதவீதம் முயற்சி செய்வது. ஆனால் கடைசியாக பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தேன். இது எல்லாம் கனவு போல் நடக்கவில்லை. உழைப்பு. இடைவிடாத முயற்சி. தன்னம்பிக்கையால் சாதித்தேன்'' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்