எனக்கு உண்மையாகவே திருமணம் நடந்தாலும் ரசிகர்கள் நம்புவார்களா...? நடிகை தமன்னா

எனக்கு உண்மையாகவே திருமணம் நடந்தாலும் அதை ரசிகர்கள் நம்புவார்களா எனத் தெரியவில்லை என்று நடிகை தமன்னா கூறியுள்ளார்.

Update: 2023-03-14 10:47 GMT

மும்பை

நடிகை தமன்னா சினிமாவுக்கு வந்து 18 வருடங்கள் ஆகிறது. இந்தியில் நடித்த முதல் படமான சாந்த் சா ரோஷன் ஷேஹ்ரா படம் 2005 மார்ச் 4-ந் தேதி வெளியானது. அடுத்த வருடமே தமிழில் கேடி படத்தில் அறிமுகம் ஆனார்.

தொடர்ந்து கல்லூரி, படிக்காதவன், அயன், பையா, சுறா, தில்லாலங்கடி, சிறுத்தை, வேங்கை உள்பட பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார்.

தெலுங்கு, இந்தியிலும் நிறைய படங்களில் நடித்துள்ளார். பாகுபலி தமன்னாவுக்கு இன்னொரு திருப்புமுனை படமாக அமைந்தது. தற்போது ரஜினிகாந்துடன் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இந்தி நடிகர் விஜய் வர்மாவும், தமன்னாவும் காதலிப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி வருகிறது. இருவரும் புத்தாண்டை கொண்டாட கோவா சென்று இருந்தனர். அங்கு விஜய் வர்மாவை தமன்னா கட்டிப்பிடித்து உதட்டோடு உதடு முத்தமிடும் வீடியோ வெளியாகி வைரலாகியது.

இந்த முத்த வீடியோ இருவரும் காதலிப்பதை உறுதி செய்து இருப்பதாக திரை உலகினரும், ரசிகர்களும் பேசி வருகிறார்கள். விஜய் வர்மா 2012-ம் ஆண்டு 'சிட்டகாங்' படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து பிங்க், மான்சூன் ஷூட் அவுட், மாண்டோ, கள்ளிபாய், கோஸ்ட் ஸ்டோரீஸ், ஆன்தாலாஜி படங்கள் மூலம் புகழ் பெற்றார். 2022-ல் ஆர்தாங்க், டார்லிங் படங்களில் நடித்தார்.

தற்போது கரீனா கபூர், கைதிப் அஹலாபத்துடன் இணைந்து 'த டிவோஷன் ஆப் சப்ஸ்பெக்ட் எக்ஸ்' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

விஜய் வர்மாவுடன் காதல் என்ற செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமன்னா விளக்கமளித்துள்ளார். அதில், "விஜய் வர்மாவுடன் ஒரு படம் மட்டுமே நடித்திருக்கிறேன். அதற்குள் அவருடன் காதல் என்று செய்திகள் வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்கு விளக்கம் கொடுப்பது அவசியமில்லை என்றே நினைக்கிறேன்.

சினிமாவைப் பொருத்த மட்டும் நடிகர்களை விடவும் நடிகைகளே அதிக திருமண வதந்தி செய்திகளில் வருகின்றனர். அதற்கு என்ன காரணம் என்பதும் எனக்கு புரியவில்லை. நான் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே டாக்டர், தொழிலதிபர் எனப் பலருடன் எனக்குப் பலமுறை திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். எனக்கு உண்மையாகவே திருமணம் நடந்தாலும் அதை ரசிகர்கள் நம்புவார்களா எனத் தெரியவில்லை" என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்