தனுஷின் 'கேப்டன் மில்லர்' பர்ஸ்ட்லுக் ஜூன் 30ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு

தனுஷின் 'கேப்டன் மில்லர்' ஃபர்ஸ்ட்லுக் ஜூன் 30ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Update: 2023-06-27 12:15 GMT

சென்னை,

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தனுஷின் 'கேப்டன் மில்லர்' ஃபர்ஸ்ட்லுக் ஜூன் 30ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்