திருப்பதி கோவிலில் நானி, பிரியங்கா மோகன் சாமி தரிசனம்
திருப்பதி கோவிலில் நானி, பிரியங்கா மோகன் சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி,
நடிகர் நானி, நடிகை பிரியங்கா மோகன், நடிகர் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடித்துள்ள, 'சூர்யாவின் சனிக்கிழமை' திரைப்படம் வரும் 29-ந்தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் நடிகர் நானி, நடிகை பிரியங்கா மோகன் ஆகியோர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தனர்.
வி.ஐ.பி. பிரேக் தரிசனம் மூலம் ஏழுமலையானை வழிபட்ட அவர்களுக்கு, ரங்கநாயகர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதம் கொடுத்து, வேத ஆசி வழங்கப்பட்டது. கோவிலில் இருந்து வெளியே வந்த அவர்களை ரசிகர்கள் சூழ்ந்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.