15 மில்லியன் பார்வைகளை கடந்த துணிவு படத்தின் சில்லா.. சில்லா பாடல்...!

துணிவு படத்தின் சில்லா.. சில்லா பாடல் 15 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

Update: 2022-12-12 14:13 GMT

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'துணிவு'. இப்படத்தில் அஜித்தின் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மை கதையில் அஜித் நடித்து வருவதாக தகவல் வெளியானது.

இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் முதல் பாடல் கடந்த 9-ஆம் தேதி வெளியானது.

துணிவு பட போஸ்டர் துள்ளலான இசையுடன் ரசிகர்களை கவர்ந்த 'சில்லா சில்லா' பாடல் யூ-டியூபில் 15 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர். இந்த அப்டேட்டால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்