'கேப்டன் மில்லர்' திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் - படக்குழு அறிவிப்பு

'கேப்டன் மில்லர்' படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

Update: 2023-11-08 13:40 GMT

சென்னை,

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்துள்ளார். வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

'கேப்டன் மில்லர்' திரைப்படத்தின் டீசர் மற்றும் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி,'கேப்டன் மில்லர்' திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்