அமீர்-யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் புதிய படம் - வெளியான அப்டேட்
அமீர் நடிக்கும் புதிய படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.;
சென்னை,
இயக்குனர் அமீர் மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான 'பருத்திவீரன்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதுடன், படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில் இவர்களது கூட்டணியில் உருவாகும் மற்றொரு படம் தொடர்பான அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.
இந்த படத்தை ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார். இதில் அமீர், சத்யா(நடிகர் ஆர்யாவின் தம்பி), சஞ்சிதா, வின்செண்ட் அசோகன், தீனா, சரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். இயக்குனர் அமீர் இந்த படத்தை தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் ஆகியவை வரும் 29-ந்தேதி மாலை 5 மணியளவில் வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தை யுவன் சங்கர் ராஜாவின் ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.