அயோத்தியில் நிறுவப்பட உள்ள கடவுள் ராமர் சிலை கோவில் சென்றடைந்தது...!

அயோத்தியில் கடவுள் ராமருக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது.

Update: 2024-01-17 23:25 GMT

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இந்து மத கடவுள் ராமருக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது. கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி உள்பட பல்வேறு தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த விழாவுக்கான ஏற்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், அயோத்தியில் நிறுவப்பட உள்ள கடவுள் ராமர் சிலை கோவில் சென்றடைந்தது. பின்னர் கிரேன் மூலம் அந்த சிலை இன்று அதிகாலை கோவில் கருவறைக்குள் கொண்டு செல்லப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்