ராமர் கோவில் கும்பாபிஷேகம்: அயோத்தி புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த்
ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை காண நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் அயோத்தி நோக்கி வந்தவண்ணம் உள்ளனர்.;
சென்னை,
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்த இடமாக கருதப்படும் ராமஜென்ம பூமியில், ராமருக்கு பிரமாண்டமான கோவில் கட்டப்பட்டுள்ளது. கலையும், பாரம்பரியமும் கொண்ட இந்த கோவிலின் கும்பாபிஷேக விழாவும், பால ராமர் சிலை பிரதிஷ்டையும் நாளை (திங்கட்கிழமை) 12.20 மணிக்கு நடைபெறுகிறது.
கும்பாபிஷேக விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். மேலும் சாதுக்கள், முக்கிய பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள் என 7 ஆயிரம் பேருக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் அயோத்தி புறப்பட்டு சென்றுள்ளார். சென்னையில் இருந்து விமானம் மூலம் உத்தரபிரதேச மாநிலம் அயோத்திக்கு ரஜினிகாந்த் செல்கிறார். ரஜினி செல்லும் அதே விமானத்தில் நடிகர் தனுஷும் லக்னோ வழியாக அயோத்திக்கு செல்கிறார்.
ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை காண நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் அயோத்தி நோக்கி வந்தவண்ணம் உள்ளனர். கும்பாபிஷேகத்தையொட்டி, அயோத்தியில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு நகரம் முழுவதும் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.