அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ளும் விருந்தினர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு பரிசு

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பிரதமர் மோடி உள்பட பலர் விருந்தினர்களாக கலந்துகொள்ள உள்ளனர்.

Update: 2024-01-13 15:32 GMT

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இந்து மத கடவுள் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. கடவுள் ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி உள்பட பல்வேறு தலைவர்களுக்கு அயோத்தி கோவில் நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், இந்த கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க 11 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ராமர் கோவில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. கோவில் கும்பாபிஷேக விழா நெருங்கி வரும் நிலையில் இதற்காக பல்வேறு ஏற்பாடுகளை உத்தரபிரதேச அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்ளும் விருந்தினர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட உள்ளது.

அதன்படி, விருந்தினர்களுக்கு நெய்யால் செய்யப்பட்ட லட்டு பரிசாக வழங்கப்பட உள்ளது. மேலும், கும்பாபிஷேகத்தில் பங்கேற்கும் விருந்தினர்கள் அனைவருக்கும் ராமர் கோவில் மண் சிறிய பெட்டிகளில் பரிசாக வழங்கப்பட உள்ளது.

ராமர் கோவில் கட்டுமான பணியின்போது அடித்தளம் அமைக்க தோண்டப்பட்ட மண் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்ளும் விருந்தினர்களுக்கு வழங்கப்பட உள்ளது. அதேபோல், சணல் பையில் 15 மீட்டர் நீளத்திற்கு வரையப்பட்ட கடவுள் ராமரின் படம் பிரதமர் மோடிக்கு பரிசளிக்கப்பட உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்