இன்றைய ராசிபலன் - 04.07.2024


இன்றைய ராசிபலன் - 04.07.2024
x
தினத்தந்தி 4 July 2024 12:54 AM GMT (Updated: 4 July 2024 1:34 AM GMT)

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.

இன்றைய பஞ்சாங்கம்

குரோதி வருடம் ஆனி மாதம் 20-ம் தேதி வியாழக்கிழமை

நட்சத்திரம்: இன்று அதிகாலை 04-52 வரை ரோகிணி பின்பு மிருகசீரிஷம்

திதி: இன்று காலை 6.27 வரை திரயோதசி பின்பு சதுர்த்தசி

யோகம்: மரண யோகம்

நல்ல நேரம் மாலை: 10.45 - 11.45

ராகு காலம் பிற்பகல்: 1.30 - 3.00

எமகண்டம் காலை: 6.00 - 7.30

குளிகை காலை: 9.00 - 10.30

கௌரி நல்ல நேரம் காலை: 12.15 - 1.30

கௌரி நல்ல நேரம் மாலை: 6.30 - 7.30

சூலம்: தெற்கு

சந்திராஷ்டம்: சித்திரை

ராசிபலன்

மேஷம்

தம்பதிகளிடையே அன்பு நீடிக்கும். தொலைந்த பொருட்கள் கைக்கு கிடைக்கும். வேலைக்கு முயற்சித்தவர்கள் நேர்முகத் தேர்வில் வெற்றிப் பெறுவர். தாங்கள் நினைத்த பொருளை வாங்கிவிடுவீர்கள். திருமணமானவர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் சென்று குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வர்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

ரிஷபம்

தங்கள் பிள்ளைக்கு நீண்ட நாட்களாக தாங்கள் தேடி கொண்டிருந்த வரன் உயர்ந்த பண்பு மற்றும் உயர் அந்தஸ்தில் சம்பந்தம் உண்டாகும். தேவையற்ற உடல் உபாதை பயம் நீங்கும். பெண்களுக்கு நல்ல செய்தி வரும். தம்பதிகளிடையே அன்பு மேலோங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

மிதுனம்

பிடித்த நபர்களை அவர்களைத் தேடிச் சென்று சந்தித்து மகிழ்வீர்கள். குடும்பத்திலுள்ளவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். வியாபாரிகளுக்கு நல்ல வியாபாரம் செழிக்கும். ஒரு தொகையை தங்கள் பிள்ளைகளின் பேரில் டெபாசிட் செய்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

கடகம்

சில்லரை வியாபாரிகளுக்கு விற்பனை கூடி அதிக லாபம் பெறுவர். சித்தி, சித்தப்பா குடும்பத்தினர் தங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவர். தம்பதிகள் விட்டுக் கொடுப்பர். அக்கம் பக்கம் வீட்டாரிடம் சண்டை வேண்டாம். பொறுமையை கையாளவும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

சிம்மம்

தம்பதிகளிடம் அன்யோன்யம் கூடும். தங்கள் சொல்படி பிள்ளைகள் நடப்பர். அயல்நாடு பயணம் மேற்கொள்ள நினைப்பவர்களுக்கு விசா கிடைக்கும். சுயதொழில் துவங்க நினைப்பவர்களுக்கு காலதாமதமின்றி துவங்க முடியும்.

அதிர்ஷ்ட நிறம் ரோஸ்

கன்னி

வியாபாரிகளுக்கு வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் கிடைப்பர். அவர்களால் அதிக லாபத்தினை பெறுவர். வேற்று மொழிகளில் ஆர்வம் உண்டாகி கற்று கொள்ள விண்ணப்பீர்கள். மகனின் திருணத்திற்காக பெண் தேடுபவர்களுக்கு எளிதில் வரன் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

துலாம்

இன்று மனக்குழப்பம் நிறைந்த நாளாக மூல நட்சத்திரக்காரர்களுக்கு இருக்கும். காரணம் தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் சாம்பல்

விருச்சிகம்

பொது துறையில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மதிப்பும் மரியாதையும் கிடைத்து உயர் பதவியும் கிடைக்கும். பொது நிகழ்ச்சி விழாவில் தங்களை கௌரவிப்பார்கள். திருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

தனுசு

கணவர் தங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பர். உங்கள் ஆலோசனைப்படி நடப்பர். பிள்ளைகள் தங்களுடைய பொறுப்புணர்ந்து படிப்பர். அவர்கள் தங்களுக்கு ஒத்தாசையாக இருப்பர். பிறந்தநாள் விழாவிற்கு குடும்பத்துடன் சென்றுவருவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

மகரம்

தங்கள் பென்சன் தொகை நிலுவையில் இருந்தவர்களுக்கு அந்த தொகை கிடைக்கப் பெறும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். நீண்ட நாட்களாக பேசாத நண்பர்களிடம் பேசி மகிழ்வீர்கள். அவர்கள் வீட்டு விருந்தில் தங்களை அழைப்பார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

கும்பம்

வியாபாரத்தில் புதிய தொழில் நுட்பத்தை புகுத்தி வாடிக்கையாளர்களை கவர்ந்து அதிக லாபத்தை ஈட்டுவீர்கள். புதியவர்களின் நட்பு கிடைக்கும். அவர்களால் தங்களுக்கு நன்மை உண்டாகும். இதுநாள் வரை உடலில் இருந்த சோர்வு நீங்கி தேகம் பலம் பெறும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

மீனம்

மார்கெட்டிங் பிரிவினர்கள் தாங்கள் குறித்த நேரத்திற்கு முன்பே இலக்கை முடித்து நற்பெயரை பெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத் தலைவிகள் தங்களுக்கு தேவையானவைகளை வாங்கி மகிழ்வீர்கள். தூக்கமின்மை பிரச்சினை தீரும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை


Next Story