விம்பிள்டன் : இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஜோகோவிச்


விம்பிள்டன் : இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஜோகோவிச்
x

Image Courtesy : Wimbledon Twitter 

தினத்தந்தி 8 July 2022 5:35 PM GMT (Updated: 8 July 2022 5:42 PM GMT)

ஜோகோவிச் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

லண்டன்:

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் முன்னணி வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், இங்கிலாந்தின் கேமரூன் நூரியுடன் மோதினார்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 2-6,6-3,6-2,6-4 ஜோகோவிச் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதியில் ரபேல் நடால், ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்கியோசுடன் மோத இருந்தார். காயம் காரணமாக நடால் அரையிறுதியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து, விம்பிள்டன் இறுதிப்போட்டியில் நோவக் ஜோகோவிச், நிக் கிர்கியோஸ் ஆகியோர் மோதுகின்றனர்.


Next Story