அமெரிக்க ஓபன் டென்னிஸ்:மகளிர் பிரிவில் ஜபேர், கார்சியா அரையிறுதிக்கு தகுதி


அமெரிக்க ஓபன் டென்னிஸ்:மகளிர் பிரிவில்  ஜபேர், கார்சியா அரையிறுதிக்கு தகுதி
x

Image Courtesy : US Open Tennis Twitter

காலிறுதி ஆட்டத்தில் ஒன்ஸ் ஜபீர் , அஜ்லா டாம்லிஜோனோ விச்சை (ஆஸ்திரேலியா) எதிர்கொண்டார்

நியூயார்க்,

கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த காலிறுதி ஆட்டம் ஒன்றில் 12-ம் நிலை வீராங்கனையான கோகோ கவூப் (அமெரிக்கா)-கரோலின் கார்சியா ( பிரான்ஸ் ) மோதினார்கள். கார்சியா 6-3 , 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்றார்.

மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் துனிசிய வீராங்கனை ஒன்ஸ் ஜபீர் ,ஆஸ்திரேலியா வீராங்கனை அஜ்லா டாம்லிஜோனோ விச்சை எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 6-4 , 7-6 ( 7-4 ) என்ற நேர் செட் கணக்கில் ஒன்ஸ் ஜபீர் வெற்றி பெற்றார்


Next Story