கத்தார் ஓபன் டென்னிஸ் - சாம்பியன் பட்டம் வென்றார் போலந்து வீராங்கனை ஸ்வியாடெக்


கத்தார் ஓபன் டென்னிஸ் - சாம்பியன் பட்டம் வென்றார்  போலந்து வீராங்கனை ஸ்வியாடெக்
x

Image Courtesy : AFP 

தினத்தந்தி 19 Feb 2023 11:05 AM GMT (Updated: 19 Feb 2023 11:30 AM GMT)

போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலாவுடன் மோதினார்.

தோஹா,

கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டி தோஹாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டி நடைபெற்றது.

இதில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலாவுடன் மோதினார்.

பரபரப்பான இந்த போட்டியில் ஸ்வியாடெக் 6-3, 6-0 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று, சாம்பியன் பட்டம் கைப்பற்றி அசத்தினார்.


Next Story