மான்டேகார்லோ டென்னிஸ்: ரூப்லெவ், சின்னர் அரைஇறுதிக்கு தகுதி


மான்டேகார்லோ டென்னிஸ்: ரூப்லெவ், சின்னர் அரைஇறுதிக்கு தகுதி
x

மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது.

மான்டே கார்லோ,

மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் ரஷியாவின் ஆந்த்ரே ரூப்லெவ், ஜெர்மனி வீரர் ஜேன் லென்னார்ட் ஸ்ட்ரப்புடன் மோதினார். இந்த போட்டியில் ரூப்லெவ் 6-1, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் ஸ்ட்ரப்பை வீழ்த்தி வெற்றி பெற்று அரைஇறுதிக்கு தகுதி பெற்றார்.

மற்றொரு கால்இறுதி போட்டி ஒன்றில் இத்தாலி வீரர் லோரென்சோ முசெட்டி, சக நாட்டு வீரரான ஜானிக் சின்னருடன் மோதினார். இந்த போட்டியில் சின்னர் 6-2, 6-2 என்ற செட் கணக்கில் முசெட்டியை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார்.


Next Story