மியாமி ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றில் ஸ்வெரெவ் அதிர்ச்சி தோல்வி


மியாமி ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றில் ஸ்வெரெவ் அதிர்ச்சி தோல்வி
x

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.

மியாமி,

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரெவ், ஜப்பான் வீரர் டாரோ டேனியல் உடன் மோதினார். இந்த போட்டியில் ஸ்வெரெவ் 0-6, 4-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.

மற்றொரு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நார்வே வீரர் கேஸ்பர் ரூட், பெலாரஸ் வீரர் இல்யா இவாஷ்காவுடன் மோதினார். இந்த போட்டியில் கேஸ்பர் ரூட் 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் இவாஷ்காவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.


Next Story