மாட்ரிட் ஓபன் டென்னிஸ் - சபலென்கா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்


மாட்ரிட் ஓபன் டென்னிஸ் -  சபலென்கா இறுதிப்போட்டிக்கு  முன்னேற்றம்
x

Image Courtesy : AFP 

அரையிறுதி ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா, கிரேக்க வீராங்கனை மரியா சக்காரியுடன் மோதினார்.

ஸ்பெயின்,

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா, கிரேக்க வீராங்கனை மரியா சக்காரியுடன் மோதினார்.

விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் சபலென்கா 6-4, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.


Next Story