மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கால்இறுதியில் அல்காரஸ்


மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கால்இறுதியில் அல்காரஸ்
x

கோப்புப்படம் 

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது.

மாட்ரிட்,

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் 6-1, 6-2 என்ற நேர்செட்டில் ஒலிம்பிக் சாம்பியன் அலெக்சாண்டர் ஸ்வெரேவை (ஜெர்மனி) வெளியேற்றி கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனும், தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான அரினா சபலென்கா (பெலாரஸ்) சரிவில் இருந்து மீண்டு வந்து 2-6, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் எகிப்தின் மேயர் ஷெரிப்பை வீழ்த்தி அரைஇறுதியை எட்டினார்.


Next Story