பில்லி ஜீன் கோப்பை டென்னிஸ்: இந்திய அணி 2-வது தோல்வி


பில்லி ஜீன் கோப்பை டென்னிஸ்: இந்திய அணி 2-வது தோல்வி
x

பில்லி ஜீன் கோப்பை டென்னிசில் ஜப்பான் 3-0 என்ற கணக்கில் இந்தியாவை தோற்கடித்தது.

தாஷ்கென்ட்,

பில்லி ஜீன் கோப்பைக்கான பெண்கள் அணிகள் டென்னிசில் ஆசிய-ஓசியானா குரூப்1 சுற்று ஆட்டம் உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கென்டில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி நேற்று ஜப்பானை எதிர்கொண்டது.

ஒற்றையர் பிரிவின் முதல் ஆட்டத்தில் இந்தியாவின் ருதுஜா போசேல் 1-6, 0-6 என்ற நேர் செட்டில் ஜப்பானின் மா ஹோன்டமாவிடம் பணிந்தார். அடுத்த ஆட்டத்தில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா 2-6, 7-5, 3-6 என்ற செட் கணக்கில் மோயுகா உச்ஜிமாவிடம் போராடி வீழ்ந்தார்.

இரட்டையரில் வைதேகி-சஹஜா ஜோடியும் ஏமாற்றியது. முடிவில் ஜப்பான் 3-0 என்ற கணக்கில் இந்தியாவை தோற்கடித்தது. 4-வது லீக்கில் ஆடிய இந்தியாவுக்கு இது 2-வது தோல்வியாகும். இந்தியா தனது பிரிவில் கடைசி ஆட்டத்தில் இன்று தென்கொரியாவுடன் மோதுகிறது.


Next Story