ஆஸ்திரிய ஓபன் டென்னிஸ் தொடர்; சாம்பியன் பட்டத்தை வென்றார் ஸ்பெயின் வீரர் பட்டிஸ்டா அகட்


ஆஸ்திரிய ஓபன் டென்னிஸ் தொடர்; சாம்பியன் பட்டத்தை வென்றார் ஸ்பெயின் வீரர் பட்டிஸ்டா அகட்
x

இறுதிப் போட்டியில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த வீரர் பட்டிஸ்டா அகட் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

வியன்னா,

ஆஸ்திரியாவில் உள்ள கிட்ஸ்புஹெல் நகரில் நடப்பாண்டிற்கான ஆஸ்திரிய ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடர் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த வீரர் பட்டிஸ்டா அகட் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

முன்னதாக ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் சக நாட்டு வீரர் ரமோஸ் வினோலாஸ் உடன் பட்டிஸ்டா மோதினார். அதில் 6-3, 7-6 என்ற செட் கணக்கில் ரமோசை வீழ்த்திய பட்டிஸ்டா, ஆஸ்திரிய ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.

இதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில், ஆஸ்திரிய வீரர் பிலிப் மிசோலிக்கை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று ஆஸ்திரிய ஓபன் டென்னிஸ் தொடர் சாம்பியன் பட்டத்தை பட்டிஸ்டா அகட் கைப்பற்றினார்.


Next Story