ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: சானியா-போபண்ணா ஜோடி வெற்றி


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: சானியா-போபண்ணா ஜோடி வெற்றி
x

Image Courtesy : PTI 

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடந்து வருகிறது.

மெல்போர்ன்,

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் கடந்த 16-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடந்து வருகிறது. வரும் 29-ம் தேதி வரை பல சுற்றுகள் கொண்ட போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவு , போட்டியில் , இந்தியாவின் சானியா மிர்சா- ரோகன் போபண்ணா ஜோடி முதல் சுற்றில் வெற்றி பெற்றது. இவர்கள், ஆஸ்திரேலியாவின் ஜெய்மீ போர்லிஸ்- லூக் சேவில்லே ஜோடியை 7-5, 6-3 என்ற நேர்செட்களில் வீழ்த்தி, 2ம் சுற்றுக்கு முன்னேறினர்.


Next Story