ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: சபலென்கா 3-வது சுற்றுக்கு தகுதி


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: சபலென்கா 3-வது சுற்றுக்கு தகுதி
x

Image Courtesy : AFP 

கிராண்ட்சிலாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது.

மெல்போர்ன்,

கிராண்ட்சிலாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் சபலென்கா (பெலாரஸ்)-ஷெல்பி ரோஜர்ஸ் (அமெரிக்கா) மோதினர். இதில் சபலென்கா 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

மற்றொரு ஆட்டத்தில் மெர்டென்ஸ் (பெல்ஜியம்) 6-4, 6-3 என்ற செட் கணக்கில் லாரன் டேவிசை (அமெரிக்கா) தோற்கடித்தார். மற்ற ஆட்டங்களில் அசரென்கா (பெலாரஸ்), காலின்ஸ் (அமெரிக்கா) ஆகியோர் வெற்றி பெற்றனர்.


Next Story