ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றில் இகா ஸ்வியாடெக் வெற்றி


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றில் இகா ஸ்வியாடெக் வெற்றி
x

image tweeted by @AustralianOpen

இன்று நடைபெற்ற போட்டியில் இகா ஸ்வியாடெக் கொலம்பியாவின் கமிலா ஓசோரியோவுடன் மோதினார்.

மெல்போர்ன்,

'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் கடந்த 16-ந்தேதி தொடங்கியது.

இதில் பெண்கள் ஒற்றையரில் பட்டம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படும் 'நம்பர் ஒன்' வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து) 6-4, 7-5 என்ற நேர் செட்டில் ஜெர்மனியின் ஜூலே நீமியரை தோற்கடித்து 2-வது சுற்றை எட்டினார்.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற 2-வது சுற்று ஆட்டத்தில் கொலம்பியாவின் கமிலா ஓசோரியோவுடன் மோதினார். இந்த போட்டியில் இகா ஸ்வியாடெக் 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் கமிலாவை வீழ்த்தி வெற்றி பெற்றார். நாளை மறுநாள் நடைபெற உள்ள 3-வது சுற்றில் ஸ்பெயின் வீராங்கனை கிறிஸ்டினா புக்சாவுடன் மோத உள்ளார்.


Next Story