ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றில் இகா ஸ்வியாடெக், பெகுலா வெற்றி


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றில் இகா ஸ்வியாடெக், பெகுலா வெற்றி
x

image courtesy: US Open Tennis twitter

இன்று நடைபெற்ற போட்டியில் இகா ஸ்வியாடெக், ஸ்பெயின் வீராங்கனை கிறிஸ்டினா பக்சாவுடன் மோதினார்.

மெல்போர்ன்,

'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 'நம்பர் ஒன்' வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து), ஸ்பெயின் வீராங்கனை கிறிஸ்டினா பக்சாவுடன் மோதினார். இந்த போட்டியில் இகா ஸ்வியாடெக் 6-0, 6-1 என்ற நேர் செட் கணக்கில் கிறிஸ்டினாவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, உக்ரைன் வீராங்கனை மார்த்தா கோஸ்ட்யுக்குடன் மோதினார். இந்த போட்டியில் பெகுலா 6-0, 6-2 என்ற நேர் செட் கணக்கில் மார்த்தாவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.


Next Story