ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 4வது சுற்றுக்கு முன்னேறினார் ஜோகோவிச்


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 4வது சுற்றுக்கு முன்னேறினார் ஜோகோவிச்
x

Image Courtesy : Australian Open Twitter 

செர்பியா வீரர் , நோவக் ஜோகோவிச் பல்கேரியா நாட்டை சேர்ந்த கிரிகோர் டிமிட்ரோவ் ஆகியோர் மோதினர்.

மெல்போர்ன்,

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் கடந்த 16-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடந்து வருகிறது. வரும் 29-ம் தேதி வரை பல சுற்றுகள் கொண்ட போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்று போட்டியில் செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் , பல்கேரியா நாட்டை சேர்ந்த கிரிகோர் டிமிட்ரோவ் ஆகியோர் மோதினர்.

இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் 7-6 ,6-3, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதனால் அவர் 4வது சுற்றுக்கு முன்னேறினார்.


Next Story